2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மத்திய மாகாணத்திலுள்ள ஆறு உள்ளூராட்சிமன்றங்களின் காலம் முடிவு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்திலுள்ள ஆறு உள்ளுராட்சி மன்றங்களின் காலம், ஜூலை 31ஆம் திகதி, நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்துள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் பீ.எச்.எம். ஜயவிக்கிரம தெரிவித்தார்.

தலாவாக்கலை நகர சபை, அக்குறணை பிரதேச சபை, ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, வில்கமுவ பிரதேச சபை, உக்குவலை பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களது காலம் முவடைந்துள்ளதுடன் மேலும் ஐந்து உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்ந்தும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்திலுள்ள 43 உள்ளூராட்சி மன்றங்களுள், கண்டி மாநகர சபை, மாத்தளை மாநகர சபை, நுவரெலியா மாநகர சபை, கங்கவட்ட கோரலய பிரதேச சபை மற்றும் குண்டசாலை பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்ந்தும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .