2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மது விற்பனையை தடுக்குமாறு கோரி, டயகம கிழக்கு பிரிவு 2 மற்றும் 3ஐ சேர்ந்த பெண்கள்,  நேற்று செவ்வாய்க்கிழமை(04) காலை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி பிரிவிலுள்ள குடியிருப்புகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் , தாம் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாகவும்; வீட்டில் வன்முறைகளையும் எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.

இதனால், தமது பிள்ளைகளால் கற்றல் நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்க முடியாதுள்ளதெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

எனவே, இவ்விரு பிரிவுகளிலும் இயங்கும் சட்டவிரோதமான மதுபான விற்பனையை நியைங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இத்தோட்டத்திலுள்ள மாரியம்மன் ஆலயத்துக்கு அருகில், மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவரை, திங்கட்கிழமை(3) இரவு 8 மணியளவில் டயகம பொலிஸார் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .