Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிமாவட்டங்களில் தொழில்புரியும் மலையக இளைஞர்,யுவதிகள் உட்பட அனைவருக்கும் எதிர்வரும் 17 ஆம் திகதி, தொழில்தருநர்கள் விடுமுறை வழங்க வேண்டுமென்றும் விடுமுறை வழங்க மறுக்கும் தொழில்தருநர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் சௌமிய இளைஞர் நிதியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இவ்விடயம் தொடர்பாக பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ள சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து நிலமைகளை விளக்கியதுடன் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை வழங்குவதில் சிரமங்கள் ஏற்படாது என்றும் 17ஆம் திகதி திங்கட்கிழமை வாக்களித்தப் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் வேலைக்கு திரும்ப முடியும் என்றும் எம்.எம்.மொஹமட் கூறினார்.
ஆனால், ஹோட்டல்கள், உணவகங்கள், புடவைக்கடைகள் போன்ற தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்களுக்கு விடுமுறை வழங்க முதலாளிமார்கள் முன்வருவதில்லை.
மலையகத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகள், கொழும்பு, காலி, மாத்தறை, பேருவளை, கல்கிசை, வத்தளை, நீர்கொழும்பு, தம்புளை, சிகிரியா, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் ஹோட்டல்கள், உணவகங்கள், இரவு விடுதிகள், புடவைக்கடைகள், ஆடைதொழிற்சாலைகள், புட்சிட்டிகள், கட்டுமான தளங்கல், பாதுகாப்பு பிரிவுகள் குறிப்பாக வீட்டு வேலைகள் என பல துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் விடுமுறை வழங்கப்படாத நூற்றுக்கணக்கான சம்பவங்கள் தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதுடன் இதற்கு தொழில்தருநர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதனை ஏற்றுக்கொண்ட உதவி தேர்தல் ஆணையாளர், இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; என்றார்.
முதற்தடைவையாக மணித்தியால மற்றும் கிலோமீட்டர் அடிப்படையில் இரண்டு நாட்கள், விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ள தேர்தல் ஆணையாளருக்கு, சௌமிய இளைஞர் நிதியம் தமது நன்றிகளை தெரிவித்துகொண்டுள்ளது.
விடுமுறை வழங்க மறுக்கும் தொழில் தருநர் தொடர்பாக தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து சகலரையும் கோரியுள்ளார்.
தகவல் தர வேண்டியவர்கள் 077-3059167 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அல்லது amuthu19@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago