2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

எமக்கே வாக்களிக்க வேண்டும்: பிரபா கணேசன்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கிச் சென்றவர்கள் அவர்களுக்கு எவ்விதமான சேவையினையும் ஆற்றவில்லை. இதனை மனதில் கொண்டு அவிசாவளை வாழ் தமிழ் மக்கள் எனக்கே வாக்களிக்க வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

அவிசாவளை பென்றித் தோட்டம் லோகன் பிரிவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  மேலும் உரையாற்றுகையில்,

எமது கட்சியின் சார்பில் போட்டியிடும் நல்லையா குமரகுருபரன் பெறப்போகும் கணிசமான வாக்கின் அடிப்படையிலேயே நான் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசிக்க முடியும். 

கடந்த மாகாண சபை தேர்தலில் எனக்கு நீங்கள் வாக்களிக்காமல் பிறிதொரு கட்சிக்கு அவிசாவளை பகுதி மக்கள் 3,000த்துக்கும் அதிகமான வாக்குகளை வழங்கினீர்கள். இன்று இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டுக் கொண்டு உங்களிடம் வாக்குகளை கேட்டு வந்திருக்கின்றார்கள். இந்த இரண்டு தமிழ் வேட்பாளர்களும் கடந்த 2 வருட மாகாண சபையின் மூலமாக உங்களுக்கு எதனை பெற்றுக் கொடுத்தார்கள் என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஆகவே, இம்முறை நீங்கள் வாய் வார்த்தை பேசும் இந்தப் போலிகளிடம் ஏமாறாமல் உங்களுக்கு கடந்த காலங்களிலே இவ்வளவு பெரிய தொகையினை ஒதுக்கிய எமக்கு வாக்களிப்பீர்களேயானால் அவிசாவளை பகுதியில் இருக்கும் அனைத்து தோட்டங்களினதும் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .