2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

போலி வாக்குச்சீட்டுகள், பிரசார அட்டைகளுடன் ஐ.தே.க ஆதரவாளர்கள் இருவர் கைது

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, எஸ்.சதீஸ்

நோர்வூட்டில் போலி வாக்குச் சீட்டுகள் மற்றும் தேர்தல் பிரசார அட்டைகளுடன் ஜக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பி.இராஜதுரையின் ஆதரவாளர்கள் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

சட்டவிரோதமான முறையில் பொகவந்தலாவை - நோர்வூட் பிரதான வீதியில் தென்மதுர பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 46 போலி வாக்குசீட்டுகள், 245 தேர்தல் பிரசார அட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்த சந்தேக நபர்களை இன்று சனிக்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .