2021 மார்ச் 04, வியாழக்கிழமை

கண்டியில் இ.தொ.கா. படுதோல்வி

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் பொதுஜன பெரமுனையும் படுதோல்வி அடைந்துள்ளன.
இத்தேர்தலில், இ.தொ.கா. மொத்தம் 4400 வாக்ககளை மட்டுமே பெற்றுள்ளதுடன் ஆசனங்கள் எதனையும் பெறவில்லை.  இதேவேளை,    நாகபாம்பு சின்னத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுன 2305 வாக்குகளை மட்டுமே மொத்தமாக பெற்றுகொண்டுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது கம்பளை தொகுதியில் 1399 வாக்குகளை பெற்றுள்ளதுடன் கலகெதரை, உடுநுவர, உடதும்பறை -9 யடிநுவர-11 ஆகிய தொகுதிகளில் சொற்ப வாக்குகளையே பெற்றுள்ளது.

இம்மாவட்டத்தில் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் இ.தொ.கா சார்பாக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.  
அதேபோல் பொதுஜன பெரமுனையும் சராசரி நூறு வாக்குளைக் கொண்டதாக மொத்தம 2305 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதில் ஆகக் கூடுதலாக வாக்குகளை 455 ஹாரிஸ்பத்துவையில் பெற்றுள்ளனர். அதேபோல் ஆகக் குறைந்தது உடதும்பறையில் 25 வாக்ககளை பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .