2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ஐ.ம.சு.கூவின் காரியாலயத்தின் மீது தாக்குதல்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்திர விராஜ்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயத்தின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, மன்தண்டாவளையில் அமைந்துள்ள, ரோஹன திஸாநாயக்கவின் தேர்தல் அலுவலகத்தின் மீதே, புதன்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர், நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் அலுவலக ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர். 11 பேர் கொண்ட கும்பலே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

'ஐக்கிய தேசியக் கட்கி வெற்றிபெற்று 48 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்குள் இவ்வாறான சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளன.  இவ்வாறான அச்சுறுத்தல்களில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ரோஹன திஸாநாயக்க கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .