2021 மார்ச் 03, புதன்கிழமை

விவசாயத்துறையிலும் பிரதமர் ரணில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சி.எம்.ரிஃபாத், மொஹமட் ஆஸிக்

'ஜனாதிபதி தேர்தலிலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் புரட்சியை ஏற்படுத்திய தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்றாவதாக விவசாயத்துறையிலும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்' என மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , நேற்று (23) மல்வத்த பீடத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடில்; கலந்துகொண்ட போதே மகாநாயக்க தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு  தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ரணில் விக்கிரமசிங்க, தனது 27ஆவது வயதிலே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக பதவியேற்று பல சேவைகளை செய்துள்ளார்.

அத்துடன், கடந்த 20 வருட காலப்பகுதியில் சிறந்த எதிர்க்கட்சி தலைவராகவும் செயற்பட்டுள்ளார். நாட்டின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை முன்வைத்த செயல்பட்டு வந்தமையலே, நான்காவது தடவையாகவும் பிரதமராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகளையும் முன்னெடுத்திருந்தார். அதன் காரணமாகவே அனைத்து இன மக்களதும்  ஆதரவை பெற்று பிரதமராக தெரிவாகினார்' என்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க   ஏனைய அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, நாட்டில் நல்லாட்சியை மலரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எனவே, அவரது அனைத்து செயற்பாடுகளும் சிறப்புர எமது ஆசீர்வாதங்களை தெரிவிப்பதோடு, மும்மணிகளினதும் ஆசியும் கிட்ட ஆசிர்வதிப்பதாக அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .