Gavitha / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் தமிழ் மிரருக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்ககப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி, நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றியீட்டியதன் விளைவாக தமிழ் மக்களுக்கு மேலும் பல சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியின் அவசியத்தை உணர்ந்துள்ளது.
அந்தவகையில,; கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், உப-தலைவர் பழனி திகாம்பரம், நான் உள்ளிட்ட மூவருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான முடிவொன்று கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.
24 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago