2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 22 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

கண்டி நகரில் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்திய 22 சாரதிகளை கண்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கண்டி பொலிஸார் நேற்று சனிக்கிழமை முதல் இன்று காலை அதிகாலை வரை கண்டி நகரின் ஊடாக போக்குவரத்து செய்யும் வாகனங்களை பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இச்சோதனைகளின்போதே, பொலிஸார் மதுபோதையுடன் வாகனங்கள் செலுத்திய 22 சாரதிகளையும் கைதுசெய்துள்ளனர்.

இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .