Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக், எம்.எஸ்.குவால்தீன்)
கண்டி கலகெதர பொலிஸ் பிரிவில் 23 வருடங்களுக்கு முன்பு பிரபுத்துவ குடும்பமொன்றை சேர்ந்தவர்கள், தமது சொத்துக்களுக்கு வாரிசு தேவையென ஏமாற்றி தத்தெடுத்த பிள்ளையை தமது பணிப்பெண்ணாக பயன்படுத்தி, பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிய சம்பவமொன்று தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து ஒரு பெண்ணும் அவரின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே பாணியில் 17 வருடங்களுக்கு முன்பு இன்னொரு குழந்தையையும் தத்தெடுத்து அப்பிள்ளையையும் தமது வேலைக்காரனாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விடயம் புரியாத இவர்கள் தொடர்ந்து பணியாட்களாகவே இருந்து வந்துள்ளனர்.
23 வயதான யுவதி கண்டி அம்பிட்டிய பகுதியையும் 17 வயதான சிறுவன் கட்டுகஸ்தோட்டை பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
தற்போது மேற்படி யுவதி தனது மகள் என மற்றுமொரு பெண் உரிமை கோரியுள்ளார். இது தொடர்பான மரபணு பரிசோதனை நடத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
1 hours ago