2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சுற்றிவளைப்பின் போது தாக்குதல்:3 பொலிஸார் காயம்

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

                                                       (எம்.எவ்.எம்.தாஹிர்)

அத்திமலே, சியம்பலாண்டுவ பகுதியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை, வீட்டில் இருக்கும் போது சுற்றி வளைத்த பொலிஸ் குழுவொன்றின் மீது பிரதேசவாசிகள் மற்றும் குடும்பத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பொலிஸார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சுட்டில் குறித்த வீட்டு உரிமையாளர் படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் சியம்பலாண்டுவ எத்திமலே கும்புக்யாயே பெரகிபுர என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்திமலே பொலிஸாருக்கு கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பொன்றின் போதே பொலிஸார் மூவருக்கு குறித்த குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்  மொனராகலை சிரிகல வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குட்பட்ட பொலிஸார் மூவரும் சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--