2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

30 வருடகால பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ஜனாதிபதியை சேரும்'

Suganthini Ratnam   / 2011 ஜூன் 10 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இந்த நாட்டில் முப்பது வருட காலமாக நீடித்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சேரும். நாம் இதனை ஒருபோதும் மறக்கக் கூடாதென மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.  

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கண்டி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் எரிக் வீரவர்தன ஆகியோரின் தலைமையில் யுத்த வீரர்களுக்கான நினைவுதின நிகழ்வு கண்டி, பூஜாபிட்டிய நகரில்  நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  

இலங்கை இராணுவப் படை, கடற்படை விமானப்படை மற்றும் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையும் இங்கு இடம்பெற்றன.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இன்று சிலர் மக்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரியும் தனியார் ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  அன்று தங்களுக்கு சம்பளம் போதாதென்றோ அல்லது ஓய்வூதியத்திட்டம் போதாதென்றோ இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால் இன்றும் நாம் பயங்கரவாத அச்சத்திற்கு மத்தியிலே வாழ நேரிட்டிருக்கும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X