Editorial / 2019 நவம்பர் 18 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை-ரில்பொல வீதி வழியாகப் பயணித்த காரொன்று, ரிப்பொல பெரிய வளையில் சுமார் 300 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில், ரில்பொல, பன்சலவத்த இலுக்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் திஸாநாயக்க (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பதுளை டிப்போவில் பணியாற்றிவந்த சாரதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மூவரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
15 Nov 2025