Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 04 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட மலையக எழுத்தாளர்களின் நூல்களை நுவரெலியா மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட 50 நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஹட்டன் சி.டப்ளியூ.எப் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வெள்ளையன் ஞாபகார்த்தமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நூலகங்களுக்கான வளப்பகிர்வு நிகழ்வில,; மலையக எழுத்தாளர்களின் நூல்கள் அவர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட தோட்டப்புறங்களிலுள்ள நூலகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை நூலகங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் குடை நிழல் நாவல், சி.இராமச்சந்திரனின் கடவுளின் குழந்தைகள், கவிஞர் மு.துரைசாமியின் நாளெந்த நாளோ, மு.சிவலிங்கத்தின் சி.வியின் தேயிலை தேசம், மலையக நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் ஒப்பாரிக் கோச்சி, அமரர் க.ப.லிங்கதாசனின் ஒளவையின் அமுத மொழிகளும் விளக்கங்களும் மற்றும் குறிஞ்சித்தேன், சாரல் நாடனின் மலையகம் வளர்த்த தமிழ், லெனின் மதிவானத்தின் உலகமயம் பண்பாடு, எதிர்ப்பு அரசியல், அல் அஸுமத்தின் குரல் வழிக் கவிதைகள், துரைவி பதிப்பகத்தின் வெளியீடான உனக்கு எதிரான வன்முறை, அ.லோறன்ஸின் மலையகம் சமகால அரசியல் - அரசியல் தீர்வு, அந்தனி ஜீவாவின் மலையக மாணிக்கங்கள் ஆகிய நூல்கள் வழங்கபடவிருக்கின்றன.
வெள்ளையன் ஞாபகார்த்தமன்றத்தின் தலைவர் எஸ்.பிலிப் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார,; தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொது செயலாளரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான எம்.திலகராஜ,; வெள்ளையன் ஞாபகார்த்தமன்றத்தின் தலைவர் எஸ்.பிலிப், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் செபஸ்டியன் ஆகியோரும் ஏனைய முக்கியஸ்த்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago