2021 ஜனவரி 16, சனிக்கிழமை

6 வீடுகளில் திருடிய நபருக்கு 18 வருட சிறை தண்டனை

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

அலவத்துகொடை பொலிஸ் பிரிவில் ஆறு வீடுகளில் திருடிய நபருக்கு கண்டி மேலதிய நீதவான் தனூஜா ஜயதுங்க 18 வருட கால சிறை தண்டனை விதித்துள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு ஏற்கனவே 11 குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது. அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி உள்ளிட்ட பொலிஸாரின் விசாரணைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2,890 மில்லி கிராம் கஞ்சாவை வைத்திருந்த இராணுவ வீரர்  ஒருவர் உட்;பட இரண்டு சந்தேக நபர்களை அலவத்துகொடை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

அலவத்துகொடை, பூஜாப்பிட்டிய சந்தியில் வைத்து இந்த சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணிக்கும் போதே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .