2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

’அதிகாரங்கள் இருந்து இயலாமையே வெளிப்படுகிறது’

Gavitha   / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

​மொஹொமட்  ஆஸிக்

பொதுமக்கள், தங்கள் வாக்குப்பலத்தால் வழங்கக்கூடிய அனைத்து அதிகாரங்களை இந்த அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள போதிலும், அரசாங்கம் இன்னும் தனது இயலாமையையே வெளிக்காட்டுவாக, மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியக் குழு அங்கத்தவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கண்டி, குண்டசாலைத் தொகுதியிலுள்ள கெங்கல்ல எனும் பகுதியில் நடைபெற்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜே.ஆர் ஜயவர்தனாவின் ஆட்சியின்போது வழங்கிய அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம், தற்போதைய அரசாங்கத்துக்கு உண்டு என்றும் இதன்போது  அவர் கூறினார்.

“கடந்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை, தனிக்கட்சியூடாகக் கேட்டனர். 20ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்துக் கேட்டனர். பாராளுமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள உறவு சீராக இருக்க வேண்டும் என்று கேட்டனர். அதனையும், அண்ணன்- தம்பி உறவாக வழங்கியுள்ளனர். அரசியல் சார்பற்ற ஜனாதிபதி வேண்டும் என்றனர். அரச நிர்வாகத்திறன் கொண்ட நாட்டைப் பாதுகாத்த ஜனாதிபதி வேண்டும் என்றனர். கேட்ட அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது.

“ஆனால், இன்று அவர்களை ஆட்சியில் அமர வைத்தவர்களே, அவர்களை குறைகாணும் அளவுக்கு நிலமை மாறியுள்ளது” என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களில் 'பொம்மை' என்று அழைக்கப்பட்டு விமர்சிக்கப்பட்ட நல்லாட்சியின் ஜனாதிபதியைக் குறிப்பட்டு, அவர் இவரை விடப் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு இப்போதைய ஆட்சி அமைந்துள்ளது என்றும் இதன்போது அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .