Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 மே 24 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஷ்பராஜா
பெருந்தோட்டங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துவதற்கான அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பில் மலையக பிரதிநிதிகள் கரிசனைக்காட்ட வேண்டுமென பிரிடோ நிறுவனம் கோரியுள்ளது.
இதேவேளை, மலையகத்தில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை அடையாளங்கண்டு, மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுப்பதுடன் அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பிரிடோ நிறுவனத்தின் வெளிக்கள இணைப்பாளர் எஸ்.கே.சந்திரசேகரன் மேலும் கூறியுள்ளதாவது,
'அனர்த்த முகாமைத்துவம் என்பது, அனர்த்தங்கள் ஏற்பட்டவுடன் மக்களுக்கு உதவுவது என்றே அரசாங்க அதிகாரிகள் உட்பட மக்களும் எண்ணிக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஆனால், அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு முடியுமான அனைத்தையும் செய்வதே அனர்த்த முகாமைத்துவத்தின் முக்கிய பங்காக இருக்க வேண்டும்.
அரசாங்க சேவைகள், விசேடமாக அனர்த்த முகாமைக்துவ அமைச்சின் செயற்பாடுகள் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சரியாக கிடைப்பதில் உள்ள பொறிமுறை சிக்கல்களை, கவனத்தில் கொண்டு பெருந்தோட்ட பகுதிக்கென அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து, மலையக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டும்' என்றார்.
'புதிய கிராமம், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு, தனது பணிகளை முன்னெடுத்து செல்ல அதிகார சபை ஒன்றை ஏற்படுத்துவதற்காக பணிகளை முன்னெடுத்த செல்லும் இந்த வேளையில், எதிர்;காலத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் அனர்;த்தங்கள் ஏற்படும் முன்னரே அவற்றை முகாமைத்துவம் செய்வது குறித்த கொள்கை ஒன்றை வகுப்பதும், அதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவதும் அவசியம். இதேவேளை, அனர்த்தங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்' என்றார்.
22 minute ago
6 hours ago
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
6 hours ago
15 Sep 2025
15 Sep 2025