Editorial / 2020 ஜூன் 09 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு, நானுஓயா நகரில் உருவச்சிலை வைப்பதற்கு, நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், இன்று (9) நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சபை கூட்ட நடவடிக்கையில், இ.தொ.காவின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நானுஓயா நகரில் உருவச்சிலையை நிர்மாணிக்கவும் அதனை நுவரெலியா பிரதேச சபை ஊடாக நிர்மாணிக்கவும் யோசனைத் தெரிவித்து, பிரேரணையை சபை தவிசாளர் முன்வைப்பதாகத் தெரிவித்தார்.
மலையக மக்களுக்கு அரணாக இருந்த அவரின் மறைவு, வேதனையைத் தருவதுடன் அவரின் இழப்பு பேரிழப்பாகும் என்றும் தெரிவித்த அவர், துணிச்சல்மிக்க தலைவரை இழந்துள்ள நாம் அவர் இறுதிமூச்சு வரை முன்னெடுத்த மக்கள் சேவைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அந்தவகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு, நுவரெலியா மாவட்டத்தில் சிலை வைப்பதற்குத் தீர்மானித்ததாகவும் இவ்வாறு சிலை வைக்கும்போது நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா பிரதான நகரில் அமைப்பது சரியானது என்பதால், இதற்கு சபை அனுமதியும் உறுப்பினர்களின் அனுமதியும் அவசியம் என்பதால், இப்பிரேரணையை சபையில் முன்வைப்பதாகத் தெரிவித்தார்.
இதனடிப்படையில் இப்பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபை உறுப்பினர்கள், எவ்வித எதிர்ப்புகளும் இன்றி பிரேரனையை நிறைவேற்றினர்.
5 minute ago
32 minute ago
37 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
32 minute ago
37 minute ago
39 minute ago