2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

’அரவிந்தகுமாருக்கு அளித்திருந்த வாக்குகள் கிடைத்திருந்தால் இன்று செந்தில் அமைச்சர்’

Menaka Mookandi   / 2020 ஒக்டோபர் 23 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமாரைப் போல நயவஞ்சகரை, இதுவரை பார்த்தது கிடையாது என்றும் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பதை அரவிந்தகுமாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அரவிந்த குமார், இரட்டை நாக்குடைய மிகப்பெரிய நயவஞ்சகர். அவர் சுயநலத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என்பது இப்போது நிஷரூபணமாகியிருக்கிறது.

'கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய மீதும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார். தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி, சாகும் வரை தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு வாக்களிக்கக் கூடாது என பிரசாரங்களை மேற்கொண்டார்.

'ஆனால் அவ்வாறு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு இன்று சுயநலனுக்காக அடமானம் வைத்திருக்கிறார். அது மாத்திரமல்லாது அவ்வாறு வாக்குகளை அடமானம் வைத்து தனக்குத் தேவையான சலுகைகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

'எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு அவர்களுக்குத் தெரியாமல் ஆளும் கட்சியுடன் கள்ள உறவை வைத்திருந்த கேவலமான மனிதர் அவர். நேர்மையான ஒரு நபராக இருந்திருந்தால் கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி, உரிய முறையில் மக்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு அராங்கத்துக்கு வாக்களித்திருப்பார். ஆயினும் அற்ப சலுகைகளுக்காக மக்களின் கொள்கைகளை விட சுயலாபமே அவருக்கு முக்கியம் என்பதை இன்று எங்களால் அறிய முடிகின்றது.

'செந்தில் தொண்டமான், அரச தரப்பில் வாக்குக் கேட்கும்போது அவருக்கு வாக்களித்திருந்தால் இன்று பதுளை மாவட்டத்தில் சக்திவாய்ந்த அமைச்சரவை அமைச்சு மட்டுமன்றி பதுளை மாவட்ட மக்கள் இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்திருப்பார்கள்.
ஆனால் இன்று அரவிந்த குமாருக்கு வாக்களித்ததால் பின் கதவு வழியாக அரசாங்கத்துக்கு உள்ளே நுழைய வேண்டிய சூழ்நிலை அவ்வாறு உருவாகியிருக்கிறது.

'மரியாதையோடு செல்ல இருந்த தமிழ் மக்களை தன்னோடு சுய இலாபத்துக்காக இனவாதத்தைப் பேசி திசை திருப்பி மீண்டும் அவர்களை கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் அடகு வைத்த பெருமை அரவிந்த குமாரையே சாரும். இப்படியான நயவஞ்சகரை நான் இதுவரை பார்த்தது கிடையாது. மக்கள் உண்மை நிலை என்ன என்பதை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--