2020 மே 28, வியாழக்கிழமை

இரத்தினபுரியில் அனர்த்தத்தில் பலியான மூவரது குடும்பங்களுக்கும் நட்டஈடு

Editorial   / 2020 மே 22 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம் பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில், சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இரத்தினபுரி வேவல்வத்தை உதுருகந்த பகுதியில், மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 வயது மாணவன் ஆர்.எம்.மதுஷான், இரத்தினபுரி லெல்லுபிட்டிய பகுதியில் தற்காலிக வியாபார கொட்டில் ஒன்றில் கல் விழுந்ததால் பலியான 30 வயதான நுவன்திகா, ஹர்ஷனீ விஜேசிங்க ஆகிய மூவரது குடும்பங்களுக்கும், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ அவர்களது வீடுகளுக்குச் சென்று நட்டஈட்டுத் தொகையைக் கையளித்தார்.

இதேவேளை, இரத்தினபுரி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கித் தவித்த மக்களை காப்பாற்றுவதற்காக, படகில சென்று கொணடிருக்கையில் மரணமான 29 வயதான இளைஞரின் குடும்பத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டது.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X