2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

இலங்கை வங்கி சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் பதுளை கிளையினர், பதுளை பஸ் நிலையத்துக்கு முன்பாக, இன்று (7) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நண்பகல் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரையான காலப்பகுதியில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“1996ஆம் ஆண்டு ஓய்வூதியம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளை அரசு அமுல்படுத்த வேண்டும்”, “சம்பளம் மற்றும் 3 வருட பயிற்சி ஆகியவற்றிலுள்ள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்”, “பிரதமர் இலங்கை வங்கி தொடர்பாக வெளியிட்ட முன்னேற்றகரமான கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X