2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

’இ.தொ.காவின் வெற்றியில் இளைஞர்களும் இணைய வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

“இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில், இ.தொ.கா  மாபெறும் வெற்றிபெறும் என்றும் எமது வெற்றியில் இளைஞர்களும் கைக்கோர்க்க வேண்டும்” என்றும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அவர் இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“எங்கு சென்றாலும் இ.தொ.காவுக்கு இளைஞர்களின் வரவேற்பே அதிகமாகக் காணப்படுகின்றது. இன்று இணைந்துள்ள இளைஞர் படை பொதுத்தேர்தலில் மாபெறும் வெற்றியை உறுதிப்படுத்துவது நிச்சயம். எனவே, இ.தொ.காவின் வெற்றியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த இளைஞர்களும் கைக்கோர்க்க வேண்டும்” என குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--