2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

’உடரதல்ல தமிழ் வித்தியாலத்தை பாருங்கள்’

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்‌ஷான்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட உடரதல்ல தமிழ் வித்தியாலயத்தை முன்னேற்றம் செய்வது குறித்து, கல்வித்துறை அதிகாரிகவும் மலையக அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தவேண்டும் என, பெற்றோரும் பாடசாலை சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பாடசாலையில், 130 மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் 1902ஆம் ஆண்டு, தோட்ட உரக்களஞ்சியசாலையாகப் பயன்படுத்திய அறையிலேயே, மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தரம் 1-5 வரை வகுப்புகள் காணப்பட்டாலும், எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றியே மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் குறித்தப் பாடசாலையின் பின்புறத்தில், சுவர்கள் வெடித்து, ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பாடசாலையை தரம் உயர்த்தி, பாடசாலைகள் கட்டடங்கள் அமைப்பதற்கு, அப்போது கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வே.இராதாகிருஷ்ணனிடம் கோரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் இதுவரையில் எந்​தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, இது தொடர்பாக, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .