2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

’ஐ.தே.கவில் வளர்ந்தவர்கள் விமர்சித்து அரசியல் செய்வது சரியில்லை’

ஆ.ரமேஸ்   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சேவையைப் பெற்றுக்கொண்டு சுகபோகம் அனுபவித்து வந்த சிலர், தற்போது கட்சித் தாவிக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்து வருகின்றனர் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட கொத்மலை தேர்தல் தொகுதி வேட்பாளர் எஸ்.திருச்செல்வம் தெரிவித்தார்.

கொத்மலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், இவ்வாறு தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்து அரசியல் செய்யும் நடவடிக்கை வேதனையளிப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகவே, மலையக மக்களுக்கு அபிவிருத்தி கிடைக்கும் என்று கொள்கை பரப்பி வந்தவர்கள், இந்தத் தேர்தலில் அதை விளம்பரப்படுத்தத் தயங்குவது ஏன் என்று கேள்வியெழுப்பினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பாசறையில் கற்ற தங்களைப் போன்ற பலருக்கு, அரசியல் அந்தஸ்த்து கிடைக்காத காரணத்தால், இன்று ஐ.தே.க  அங்கிகாரம் வழங்கியுள்ளது என்றும் ஆனாலும் தான் வந்த பாதையை மறந்துவிடவில்லை என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .