2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஓட்டோ விபத்தில் மூவர் படுகாயம்

Kogilavani   / 2021 மார்ச் 05 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

ஹட்டன்- பொகவந்தலாவை பிரதான வீதி, வனராஜா பகுதியில், இன்று (5) பகல் இடம்பெற்ற ஓட்டோ விபத்தில், மூவர் படுகாயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகவீனமுற்ற ஒருவரை, கொட்டகலையிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்பியுலன்ஸ் வண்டியின் பின்னால் வந்த ஓட்டோ,  வனராஜா சந்தியில் திருப்ப முற்பட்டபோது பின்னால் வந்த ஓட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் ஓட்டோ சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

அம்புலன்ஸ் வண்டியில் கொண்டுசெல்லப்பட்ட  நோயாளரின் உறவினர்களேஅம்பியுலன்ஸ் வண்டியை பின்தொடர்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .