Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல், நுவரெலியா பிரதேச சபையில், நேற்று (18) நடைபெற்றது.
இதன்போது நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை தெளிப்பதோடு மக்களுக்கு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுவதோடு மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில், கைகளை சுத்தப்படுத்த நீர் குழாய்களையும் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டங்களை ஒரு சில தினங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக, நுவரெலியா பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டதாகவும் இந்தக் கலந்துரையாடலில், நானுஒயா உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி, கந்தப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
7 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
26 Jan 2026