2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’தனிமனித சுகாதாரத்தைப் பேணவும்’

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் பங்களிப்புமட்டுமன்றி தனிமனித சுகாதாரத்தை, ஒவ்வொருவரும் பேண வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், பெருந்தோட்ட மக்கள், சுகாதார விடயங்களில் அதிகக் கரிசணைக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், தொழிற்சங்க அரசியலுக்கு அப்பால், நாம் அனைவரும் ஒரே தொப்புள்கொடி உறவுகள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.

இவ்விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நிதானத்துடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும் என்றும் தொழில்புரியும் இடங்களில் சுகாதாரத்தை முறையாகக் கையாள வேண்டும் என்றும் விசேடமாக வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் சுற்றுலா பயணிகள்,  வெளிநபர்களிடமிருந்து, சற்றுநாம் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கொரோனாத் தொற்று துரதிஷ்டவசமாக, பெருந்தோட்டப் பகுதிகளில் பரவுமாயின் மிக இலகுவில் பெருந்தோட்டப் பகுதி முழுவதும் வியாபித்துவிடும் என்றும் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள வானிலை, குடியிருப்பு வசதிகள், தொழில்புரியும் ஸ்தலத்தின் நிலைமை இடவசதி போன்றவற்றைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .