2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

தீபாவளிக்கு ஊரடங்கு?: ஹட்டனின் அதிரடித் தீர்மானம்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 23 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நவம்பர் 14,15ஆம் திகதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில், ஹட்டன்-டிக்கோயா நகர சபையில் அதிரடியான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நகர சபைக்கு உட்பட்ட எல்லைப்பகுதியில் அங்காடி வியாபாரம் செய்வதற்கு தடை​ செய்வதுடன்,  வெளிபிரதேச வியாபாரிகள்  நகர சபை எல்லைப்பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர சபைத் தலைவர் சடையன் பாலச்சந்திரன் தலைமையில், நக​ர சபை மண்டபத்தில், இன்று (23) நடைபெற்ற மாதாந்த சபையமர்வின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நகர மக்களையும் நகருக்கு வருவோரையும் பாதுகாக்க வேண்டும். ஆகவே தீபாவளி பண்டியைக்கு வருடாந்தம் அங்காடி வியாபாரம் செய்ய அனுமதி வழங்காது நகர வர்த்தக நிலையங்களிலும் கொவிட்-19? சுகாதார நடைமுறையை பேணி வர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதேபோல தீபாவளி பண்டிக்கைக்கு கொழும்பு உள்ளிட்ட வெளிமாட்டங்களிலிருந்து வருகைத்தரும் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகள் நகருக்கு வருவதை கட்டுபடுத்தும் வகையில் தீபாவளி தினங்களன்று, தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்​டுமென்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கை அடங்கிய மனுவொன்றை இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அனுப்பிவைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், ஹட்டன்- டிக்​கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், தற்போது மூடப்பட்டிருக்கும்  மீன் விற்பனை நிலையம் உள்ளிட்ட இறைச்சி விற்பனை நிலையங்களின் ஊழியர்களுக்கு பி.ஆர்.சி பரிசோதனைகளைச் செய்து, அதன் அறிக்கை கிடைத்ததன் பின்னர், அந்த வர்த்தக நிலையங்களை  மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .