2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தலவாக்கலை, கினிகத்தேனையில் இருவருக்கு தொற்று

Kogilavani   / 2020 நவம்பர் 20 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா     

தலவாக்கலை- சென் கிளாயர் தோட்டத்தில், 22 வயதுடைய பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு - தெமட்டகொடையிலிருந்து குறித்த பெண் தனது கணவர் சகிதம் கடந்த 16 ஆம் திகதி சென்கிளாயர் பிரிவுக்கு சென்றுள்ளார். அவரது கணவர், மேற்படி பெண்ணை அவரது வீட்டில் விட்டுவிட்டு தனது சொந்த ஊரான லிப்பக்கலை தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்தக் காரணத்தால், குறித்த யுவதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் உட்பட அவருடன் நெருங்கி பழகியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தொற்றுக்குள்ளான பெண், தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கினிகத்தேன பிளக்வோட்டர் பகுதியிலும் 19 வயது யுவதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் வேலை செய்த நிலையில், 10 ஆம் திகதி  அவர் ஊர் திரும்பியுள்ளார். நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .