2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

தொடர் மழையால் ஆற்றங்கரைகள் கரைந்து போகின்றன

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை பிரதேசத்தில், நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, ஆற்றங்கரைகள் கரைந்தும் இடிந்தும் செல்வதாகவும் இதனால், உணவுப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர் மழை காரணமாக, ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியமையாலேயே, இந்நிலை ஏற்பட்டுள்ளது. பலாங்கொடை பிரதேசத்தை ஊடறுத்து ஓடும் வளவை கங்கையின் இரு கரையோரங்களில் இந்நிலமை ஏற்பட்டுள்ளது.

வளவைகங்கை கரைகளின் இருமருங்கிலும் பாரிய குழிகள் ஏற்பட்டு, ஆற்றின் கரைகள் விரிவடைந்துள்ளன என, சுற்றால் பாதுகாப்பு அமைப்புகளும் ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

சட்டவி​ரோத இரத்தினக் கல் அகழ்வு, மணல் அகழ்வு, காடழிப்பு போன்ற சட்டவிரோத மனிதச் செயற்பாடுகள் காரணாகவே, இவ்வாறு சுற்றாடற் பாதிப்பு ஏற்படுவதாகவும் இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த, உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் தண்டனைகளும் வழங்கப்படல் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--