2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

தொடர் மழையால் போக்குவரத்துகள் ஸ்தம்பிதம்

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.ஏ.எம்.ஹசனார்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலை காரணமாக, வெள்ள அனர்த்தங்களும் மண்சரிவு ஏற்பட்டு, பல்வேறு வீதிகளுக்கான போக்குவரத்துகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இந்நிலையில், ​நேற்று (09), பெய்த கடும் மழை காரணமாக, வெலிமடை வைத்தியசாலை அமைந்துள்ள மலைப் பகுதி சரிந்து விழுந்ததில், வெலிமடை - உடபுஸ்ஸலாவ வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி, குறித்த வீதிக்கான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியைச் சீர் செய்வதற்கு, வெலிமடை பொலிஸார் காவலரண் அமைத்து, வீதி போக்குவரத்து அதிகாரச சபை, பிரதேச செயலகம், மண்மேடை அகற்றி வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, வெலிமடை - நுவரெலியா வீதியில், வெலும்கல பகுதியின் 83ஆம் மைல் கல்லுக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில், குறித்த வீதி முழுமையாக மூடப்பட்டு, நேற்று (09), போக்குரவத்து பல மணிநேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--