2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நீர்த்தேக்கத்தில் மூழ்கி சிறுவன் பலி

Kogilavani   / 2020 ஒக்டோபர் 16 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக்க

சியம்பலாண்டுவ- முதுகண்டிய நீர்த்தேகத்தில் நீராடிக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என்று, கொவிந்துபுர பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் சியம்பலாண்டுவ - களுஒபிப பகுதியைச் சேர்ந்த கிஹான் முதுமால் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞன் தனது நண்பர்களுடன் நீர்த்தேக்கத்துக்குச் சென்று நீராடிக்கொண்டிருந்த போது இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் ஒரு இளைஞன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசப் பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X