2021 மார்ச் 06, சனிக்கிழமை

பசளைப் பொதிகள் அதிக விலைக்கு விற்பனை

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்   

பலாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில், பசளை அடங்கியப் பொதிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.  

50 கிலோகிராம் பசளை மூடையின் கட்டுப்பாட்டு விலை 1,000 ரூபாய் என்றப் போதிலும், பலாங்கொடைப் பிரதேசத்தில், 1,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

அத்துடன் பசளையை விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள், அவற்றுக்கான பற்றுச்சீட்டையும் வழங்குவதில்லை என்றும் சாதாரண கடதாசித் துண்டுகளில் எந்தவிதமான அத்தாட்சிகளும் இன்றி, அவற்றுக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

ஒரு பசளைப் பொதியின் விலை 1,000 ரூபாய் என்று, பசளைப் பைகளில் பொறிக்கப்பட்டுள்ள போதிலும், தமக்குரிய வாடகைக் கூலி, போக்குவரத்து செலவுகளுக்காகவே, அவற்றின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.  

எனினும் இவ்விடயம் தொடர்பில், பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாய அமைப்புகள் வேண்டுகோள் விடுக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .