2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

பண்டாரவளையில் மேலும் மூவருக்கு தொற்று

Gavitha   / 2021 ஜனவரி 18 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பண்டாரவளையின், கினிகம எனும் பகுதியில், இன்று (18), கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என, பண்டாரவளை பொது சுகாதாரப்பணியகத்தினர் தெரிவித்தனர். 

ஏற்கெனவே கொழும்பிலிருந்து, கினிகம பகுதிக்கு வந்திருந்த பெண்ணொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவருடைய குடும்பத்தாருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவு, இன்று வெளியாகியிருந்த நிலையில், மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மூவருடன் தொடர்பைப்  பேணி வந்தவர்கள் தொடர்பான விவரங்கள் திரட்டப்பட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .