Gavitha / 2021 பெப்ரவரி 04 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாகவும் அந்த வகையில், கெமுனுபுர ஆடைத் தொழிற்சாலையில், 75 பேருக்கு, இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று எற்பட்டுள்ளது என, பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆடைத் தொழிற்சாலையில் தொழில் செய்வோருக்கு, ரெபிட் ஆன்டிஜன் பரிசோதனை, பிசிஆர் பரிசோதனை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் இதன் மூலமே, 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பசறையில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 26 பேர் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் பதுளை அரசினர் வைத்தியசாலையில் 3 பேருக்கும் பதுளையில் 2 பாடசாலைகளில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் படி, மாவட்டத்தில் 139 பேர், கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
49 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
4 hours ago