2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பஸ்தரிப்பிடம் இன்மையால் பயணிகள் அவதி

Kogilavani   / 2021 ஜனவரி 12 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை தாமஹன பிரதேசத்தில், பஸ்தரிப்பிடம் இன்மையால், பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தாமஹன பிரதேசத்திலிருந்து, வெலிக்கபொல, கொட்டிபுல்வல, இம்புலாமுர, பல்லெபெத்த, பனான, கோங்கஸ்தென்ன, அம்பெவில ஆகியப் பகுதிகளுக்குச் செல்பவர்களே, பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கடும் மழை, வெயில் காலங்களில் ஒதுங்குவதற்கு இடமின்றி தாம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மேற்படிப் பிரதேசத்தில் பஸ்தரிப்பிடமொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு முன்வர வேண்டுமென்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .