2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

பார்க் தோட்ட விவகாரம்: மூவருக்கு சரீரப்பிணை

Gavitha   / 2021 ஜனவரி 26 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

கந்தப்பளை, பார்க் தோட்டத்தில், கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பிரச்சினையுடன் தொடர்புடைய, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ், பிரதேச சபை உறுப்பினர் எம். ராமஜெயம், அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தவிசாளர் எஸ். கதிர்செல்வன் ஆகியோரை, தலா 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத ஜயசேகர, இன்று (26) அனுமதி வழங்கியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாத, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வனும் கொட்டக்கலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத்தும் நாளை (27) நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர் என, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்ததை அடுத்து, இவ்விருவரையும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் அழைப்பாணை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .