2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

பொகவந்தலாவையில் மேலும் இருவருக்குக் கொரோனா

Gavitha   / 2021 ஜனவரி 26 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவ பகுதியில், மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தன்.

இந்த இரண்டு தொற்றாளர்களும், கேகாலை, பின்னவலை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ கிழ்ப்பிரிவு தோட்டத்தில் ஒருவருக்கும் பொகவந்தலாவ சீனாகலை டிபி பிரிவில் ஒருவருக்கும் என, இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்கள் கொழும்பில் பணிபுரிந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .