2020 ஓகஸ்ட் 10, திங்கட்கிழமை

மவுசாகலை தோட்ட மக்கள் இடம்பெயர்வு

எம். செல்வராஜா   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில், தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள ஹப்புத்தளை பகுதியின் மவுசாகலை தோட்டத்திலுள்ள 38 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர், நேற்று (08), பிற்பகல், பண்டார-எடிலிய தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

சொந்த வீடுகளில் இருந்து, தற்காலிகமாக பாடசாலையில் தங்கியிருப்போருக்கான நிவாரண உதவிகளும் உலர் உணவுப் பொருள்களும் ஹப்புத்தளை பிரதேச செயலாளரின் சிபாரிசின் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு, இடர் முகாமைத்துவ பதுளை மாவட்ட பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--