செ.தி.பெருமாள் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொது மைதானத்தின் வாயிற்கதவுகள், நேற்று (09), மஸ்கெலியா பிரதேச சபைத் தவிசாளர் செம்பகவள்ளியால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த மைதானம், நேற்று முன்தினம் காலை முதல் மூடப்பட்டிருந்த நிலையில், கடினபந்து அணியின் மாணவர்கள், வெகுநேரமாக வெளியே காத்திருந்த பின்னரே, மைதானம் திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தவிசாளர், பாடசாலை மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள, எவ்விதத் தடையும் எம்மால் ஏற்படாது என்று கூறினார்.
50 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள மைதானத்தைப் பாதுகாப்பாக வைக்கவேண்டிய கடமை உள்ளது என்றும் எனவேதான், மைதானத்தை மூடிவைத்திருந்ததாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025