Editorial / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் வெங்கல பதக்கத்தை வெற்றிக்கொண்ட மலையக இளைஞன் ராஜகுமாரனை கௌரவிக்கும் நிகழ்வு சி.எல்.எப் வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், ராஜகுமாரன் மாலை மற்றும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌவிக்கப்பட்டார்.
இதன்போது, நவம்பர் மாதம் 11ஆம் திகதி உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கவுள்ள ராஜகுமாரன், டுபாய் செல்வதற்கான அனைத்து செலவுகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, பிரதி பொதுச்செயலாளர் ஜுவன் தொண்டமான், பரத் அருள்சாமி, கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் இ.தொ.கா உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சீனாவின் ஏப் இன் நகரில் நடைபெற்ற 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் 60 கிலோகிராம் எடை பிரிவில் ராஜகுமாரன் வெண்கல பதக்கத்தை அண்மையில் பெற்றுக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், டுபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்குப்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
38 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
56 minute ago