Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, தாம் ஒருபோதும் அதரவளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிகொள்ளும் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம், வேண்டுகோள் விடுத்துள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்தார்
ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில், நேற்று (20) 483 பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசியல் தலைவர்கள், கோழிக்குஞ்சுகளையே வழங்கினர் என்றும் ஆனால், நான்கு வருடங்களாக வெற்றிநடைபோடும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, காணி உறுதிப்பத்திரம் வழங்குவதாக அவர் கூறினார்.
மலையகத்தின் அபிவிருத்திக்கு, பிரதமரின் பங்களிப்பு அளப்பரியது என்றும் எனவே, பிரதமரும் கைகேர்த்து, தேர்தலில் இணைந்து பயணிக்க வேண்டும் என்று, மக்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago