2021 மார்ச் 08, திங்கட்கிழமை

விபத்தில் சாரதி பலி

Niroshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கேகாலை - வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பேபுஸ்ஸ குருநாகல் வீதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் அம்பேபுஸ்ஸவில் இருந்து  குருநாகல் நோக்கிச் சென்ற வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், முச்சகக்ரவண்டி சாரதி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான நபர் அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், வத்தேவௌ - தல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த, மத்துமகே பிரியந்த (வயது 39) என்பவர் என வராக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .