2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

'மலையகம் காடாகும்'

Niroshini   / 2016 ஜூலை 17 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

'மலையக மக்கள், பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், கல்வியில் பின்தங்கிய சமூகம் அல்ல. எமது சமூகம், பெருந்தோட்டங்களை மட்டும் நம்பியிருக்கின்ற காலம் மாறிக்கொண்டு செல்கின்றது. இன்னும் 5 வருடங்களில், மலையகத்தில் காடுகளையே காணமுடியும்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில், கணித பாடத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, கொட்டக்கலை, அஸ்விக்கா விடுதியில் சனிக்கிழமை (16) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இன்று எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் தொழில்புரிகின்றார்கள். இவர்களின் 100 சதவீத அர்ப்பணிப்பு காரணமாகவே, இன்று மலையகத்தின் கல்வி, முன்னேற்றம் கண்டுள்ளது' என்றார்.  

'இன்றைய மாணவர்களின் கல்விப் பெறுபேறுகளைப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் எமது சமூகம், எல்லாத் துறைகளிலும் போட்டியிடக் கூடிய சமூகமாக மாறிவிடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

மேலும், எமது சமூகத்துக்காக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான், பல்வேறு வேலைத்திட்டங்களை செய்து காட்டி, எமது சமூகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்சென்றார். எனவே, இன்றைய எமது சமூகம், இதனை நன்கு உணர்ந்து செயற்பட்டு, எதிர்காலத்தில் சிறந்த ஒரு சமூகமாக மாறவேண்டும் என்பதே எமது கனவாகும்' என்று முத்து சிவலிங்கம் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .