2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

சுழல் காற்றினால் 02 வீடுகள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஞ்ஜன்

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோதல்ல தோட்டத்தை ஊடறுத்து வீசிய சுழல் காற்றினால் 02 வீடுகளின் கூரைகள் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

இப்பகுதியில் செவ்வாய்கிழமை (15)  மாலை மழையுடன் கூடிய சுழல் காற்று வீசியது. இந்நிலையிலேயே இவ்வீடுகளின் கூரைகள் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

இவ்வீடுகளில் குடியிருந்தவர்கள் அயலவர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்களுக்கான உணவுகளை தோட்ட முகாமையும் கிராம உத்தியோகத்தரும் ஏற்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .