2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நாளை ஆர்ப்பாட்டம்

Janu   / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (28) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓய்வூதியர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்கள்:

  • 2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படவில்லை.
  • 2025 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்குப் பாரிய அளவில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமக்கு முன்னைய காலப்பகுதிகளில் ஓய்வுபெற்றவர்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஓய்வூதிய சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம். இஸட். ஷாஜஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .