2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மது போதையில் டீ.ஐ.ஜீ.யின் ஜீப் உட்பட 6 வாகனங்களை சேதப்படுத்திய பொலிஸார்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

கண்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவர் மது போதையில் ஜீப் வண்டியை செலுத்தி பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கம்மன்பிலவின் வாகனம் உட்பட ஆறு வாகனங்களை சேதப்படுத்திய சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கண்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் மது போதையில் ஜீப் வண்டியை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டி, தென்னங்கும்புர, தல்வத்த பகுதியினூடாக மது போதையில் ஜீப் வண்டியைச் செலுத்திச் சென்றுள்ள மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் எதிரே வந்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபரின் வாகனத்தை மோதியுள்ளதுடன் மேலும் ஐந்து வாகனங்களையும் மோதி சேதப்படுத்தியுள்ளனர்.

இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் விபத்தில் சிக்குண்ட வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்று பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கம்மன்பில தெரிவித்தார்.


  Comments - 0

 • tamilsalafi.edicypages.com Monday, 13 December 2010 04:35 PM

  மதுவுக்கு தடை எப்போது வருமோ ?

  Reply : 0       0

  Lankan Monday, 13 December 2010 07:20 PM

  காக்க காக்க !!!!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--