Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Gavitha / 2021 ஜனவரி 11 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறிய அரசாங்கம், தற்போது அதைப் பெற்றுக்கொடுப்பாது, தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றது என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கொனகலகல விஹாரையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கம் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்நாட்டில், பல்லின மக்கள் வாழ்கின்றனர் என்பதை, இந்நாட்டிலுள்ள பௌத்தர்களாகிய நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் அனைத்து இன மக்களுடனும், புரிந்துணர்வுடன் வாழவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும், எப்போதும் மக்களின் நலனுக்காகவே குரல் கொடுப்பதாகவும் இருந்தபோதும் அரசாங்கம் சிலரை முன்வரிசையில் வைத்து, தங்களை விமர்சித்து வருவதாகவும் இருந்தாலும் இவற்றுக்கு பயந்து, மக்கள் நலனுக்காக வேலை செய்வதை நிறுத்தமாட்டோம் என்றும் தெரிவித்தா்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, டசன் கணக்கில் விமானங்களை வாடகைக்கு பெற்று, தனது எதிரணியை வெற்றிபெறச் செய்துவிட்டு, தற்போது வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தொடர்பில் கண்டுகொள்ளாமல், உக்ரைனில் இருந்து சுற்றுலாப்பயணிகளைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த சுற்றலாப் பயணிகளைக் கொண்டுவரும் ஆர்வத்தை, கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கொண்டு வருவதற்கு ஏன் காட்டவில்லை என்று அவர் கேள்வியெழுப்பினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில், பல உத்திகளைக் கையாண்டு, அரசாங்கம் ஏமாற்று வேலைகளைச் செய்து வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
42 minute ago
58 minute ago