2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

16 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு

Kogilavani   / 2021 ஜனவரி 21 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அஙகிகாரம்  வழங்கியுள்ளது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் தொடர் முயற்சியால் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த வருடம் கல்வி அமைச்சரிடம் இதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

அதன் பின்னர், நுவரெலியா மாவட்ட தேசிய பாடசாலை விவகாரம் குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இதுகுறித்து கடந்தவாரம் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைவாக, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி, பொஸ்கோ கல்லூரி, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம், ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரி, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம், மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி, ஹொன்சி கல்லூரி, புலும்பீல்ட் கல்லூரி, இராகலை தமிழ் மகா வித்தியாலயம், அல்.மின்ஹாஜ் மகா வித்தியாலயம், பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயம், லொலிடின்டி தமிழ் மகா வித்தியாலயம், மெதடிஸ்த கல்லூரி, நுஃமெரயா தமிழ் மகா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளே தேசய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X